12 மணிநேர மின்வெட்டுடன் இருட்டில் இருக்க மக்கள் தயாராகுங்கள் என அமைச்சர் பாத்தலி சம்பிக ரனவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும்.
அதேநேரம், 200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும்.
நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டாலும் நாட்டின் மின்சாரத்தின் உற்பத்தியில் 45 வீத அளவு இழக்கப்படும்.
அப்படியானால், நாடு கண்டிப்பாக 12 மணிநேர மின்வெட்டை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






