யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து பழுதடைந்த நிலையில் கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் காணியை துப்புரவு செய்த போது அதில் இருந்தே பழுதடைந்த நிலையில் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, குறித்த இடத்திற்கு வந்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டமையோடு, குறித்த கைத்துப்பாக்கியையும் எடுத்துச் சென்றனர் .
மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





