முல்லைத்தீவு ஊடக அமையம் திறந்து வைப்பு!

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கான அலுவலகம் இன்று கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

முல்லைதீவு ஊடக அமையத்தின் கட்டட திறப்பு விழா முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் தலைவர் கலாநிதி எஸ்.ரகுராம் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து, அலுவலக கட்டடத்தை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் திறந்து வைத்தார்.

மேலும், யாழ் ஊடக அமைய நிறுவுணர் தயாபரன் மற்றும் வடக்கு மாகாணத்தின் ஊடக அமைப்புக்களின் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply