மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரோல் தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தீ வைக்கப்பட்டதையடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளமையுடன், வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளது.
மீறாவோடை 4 ஆம் பிரிவு கூட்டுறவு சங்க வீதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் முச்சக்கரவண்டியில் வாடகைக்கு சென்று சம்பவதினமான இன்று அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பிய பின்னர் முச்சக்கரவண்டியை வீட்டின் முன்பகுதியில் நிறுத்திவிட்டு நித்திரைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், அதிகாலை 4 மணியளவில் சத்தம் கேட்டு வீட்டின் கதவைதிறந்து வெளியேவந்தபோது நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து கொண்டிருந்ததையடுத்து தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்ததாகவும், இருந்தபோதும் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து செதமடைந்துள்ளமையுடன், வீட்டின் முன்பகுதி யன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, வீட்டின் முன்பகுதி சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதம் ஒன்றை பொலிசார் மீட்டுள்ளமையுடன், இது இரு குடும்பங்களுக்குள்ளே ஏற்பட்ட சண்டை காரணமாக இச்சம்பவம் இடம்பெற்று இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.






