மட்டக்களப்பு, வவுணதீவில், மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் 12 மதுபான போத்தல்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று பூரண தினத்தில் சட்டவிரோதமாக வீடுகளில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, இன்று காலை நெடுஞ்சேனை பிரதேசத்தில் வௌ;வேறு இரு வீடுகளை பொலிஸார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர்.
இதன்போது, 18 வயதுடைய இளைஞர் ஒருவரை 7 போத்தல் கொண்ட 5,250 மில்லி லீற்றர் மதுபானத்துடனும், 43 வயதுடைய பெண் ஒருவரை 5 போத்தல் கொண்ட 3750 மில்லி லீற்றர் மதுபானத்துடன் கைது செய்துள்ளனர்.
இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.






