யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் 59 பாடசாலைகள் நாளை திறக்க முடிவு!

யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் உள்ள 200 மாணவர்களுக்குக் குறைவான 59 பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்றன.

வலயக் கல்விப்பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையில் 59 பாடசாலை அதிபர்களுக்கும் இணையவழி செயலியூடாக கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில், தாங்கள் நாளை பாடசாலைகளைத் தொடக்க ஆயத்தமாக இருப்பதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு அதிபரேனும் மறுப்புத் தெரிவிக்காமல் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

மேலும், சகல ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துவதாகவும், ஏற்கனவே பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply