யாழ். பலாலி வீதியில் மினி ரகமோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகின.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக யாழ். போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து, மணிக்கூட்டு கோபுர பின்பாக உள்ள வீதி மற்றும் பலாலி வீதியில் இருந்து வேம்படி அருகில் உள்ள வீதியைக் கடக்க முற்பட்டபோதே இடம்பெற்றுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.







