வெல்லவாய – எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடியைச் சேர்ந்த தந்தையும், அவரது இரண்டு பிள்ளைகளுமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
இன்று புதன்கிழமை பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தில் 38 வயதான தந்தையும், 15 வயதான மகன் மற்றும் 11 வயதான மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.






