(ந.லோகதயாளன்)…

(ந.லோகதயாளன்)

யாழ்., காரைநகர் – கோவிலம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்., காரைநகர் கடற்பகுதியிலிருந்து இன்று மாலை குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தமிழகத்தின், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரன் என்ற மீனவர் எனத் தெரியவந்துள்ளது.

காரைநகர்- கோவிலம் கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இந்திய மீனவர்கள் சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர்.

இதனை அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் அவதானித்திருந்த நிலையில், இலங்கைக் கடற்படைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப்படகை சுற்றிவளைக்க முயன்றுள்ளனர்.

அதன்போது கடற்படையினரின் கண்காணிப்புப் படகு மோதியதில் மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது என கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் படகிலிருந்த மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியிருந்த நிலையில் அவர்களில் இருவர் கடற்படையினரால் மீட்கப்பட்டமையுடன் மற்றைய நபர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் நீரில் மூழ்கிக் காணாமல்போன மீனவரைக் கண்டுபிடிக்க கடற்படையினர் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Mumbai, India

Leave a Reply