மன்னார் கல்வி வலயத்தின் கீழ் 200 விட குறைவான மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகள் இன்றைய தினம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழில்சங்க போராட்டம் இடம் பெற்று வருகின்ற நிலையில் அரச தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் வியாழக்கிழமை (21) பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நீண்ட இடைவேளைக்கு பின்னர் பாடசாலை ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தொடர்ந்து குழப்பநிலை காணப்படுவதால் இன்றைய தினம் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்படுவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.
மாணவர்களின் சுகாதார நடைமுறைகள் தொடர்பான அறிவுறுத்தல்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதுடன் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதையும் கவனிக்ககூடியதாக உள்ளது
மேலும் ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை தொடர்பாகவும் அவற்றில் வருகை தரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான விபரங்கள் புலனாய்வாளர்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.







