கடந்த காலத்தில் மைத்திரி பாலசிறீசேனாவை மடியில் தூக்கி வைத்திருந்து, அவருக்கும் ரணிலுக்கும் திருமணம் செய்து வைத்தீர்கள். இதைத் தான் கடந்த ஆட்சியில் செய்துள்ளீர்கள் என துறைமுக அமைச்சர் ரோகித அபேகுணவர்தன கடுமையாக சபையில் சாடியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஆசிரிய- அதிபர்கள் இன்று மாணவர்களின் கல்வியை கேள்விக் குறியாக்கியுள்ளனர்.
அவர்களுக்கு அடுத்த வரவு செலவு திட்டத்தில் தீர்வை வழங்குவோம் என நாம் உறுதியாக கூறியுள்ள போதிலும் அதைக் கேட்கவில்லை.
ஆசிரியர்கள் – அதிபர்கள் இன்று 100 நாட்களாக தொழில் சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்படி என்றால் என்ன அர்த்தம்.மாணவர்களுக்கு 100 நாட்கள் கல்வி இல்லை என்று தான் அர்த்தம்.
ஒரு சிலர் அரசியல் நோக்கத்திற்காக ஆசிரியர்களை திசை திருப்புகின்றனர்.
அந்த ஒரு சிலருக்கு அரசியல் ஆசை இருந்தால் தாரளமாக வரலாம்.அதற்கு பதிலாக மாணவர்களின் கல்வியில் விளையாட வேண்டாம்.நாம் அரசியல் பழிவாங்கலை செய்யவில்லை. என தெரிவித்தார்.
தற்போது எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் ,கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்தனர்.
அன்று ஜனாதிபதி மைத்திரிபலாவை மடியில் தூக்கி வைத்து சட்டத்தை வளைத்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு துணை நின்றதோடு, ரணிலுக்கும் மைதிர்பாலவுக்கும் திருமணம் செய்து வைத்தார்களே தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்.






