நெடுந்தீவில் அடித்து நொறுக்கப்பட்ட மாதாவின் உருவம்!

நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப்பணை சந்தியில் அமைந்துள்ள மாதாவின் உருவம், இன்று மதியம் 12மணியளவில் விசமிகளால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவு ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப் பனையடி சந்தியில் நீண்ட காலமாக மக்களால் வணங்கப்பட்டு வந்த மாதா சுருவமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

மாதா சுருவம் உடைந்திருப்பதை கண்டறிந்த மக்கள் உடனடியாக நெடுந்தீவு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply