மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம் !

<!–

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றல் ஆரம்பம் ! – Athavan News

மட்டக்களப்பில் பாடசாலை மாணவர்களுக்கான  பைசர்  தடுப்பு ஊசி  ஏற்றும்  நடவடிக்கை   இன்று (வியாழக்கிழமை) ஏற்றும் நடவடிக்கை  மகாஜன கல்லூரி , அமிர்தகழி   ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம். கல்லடி விபுலானந்தா வித்தியாலயம், விவேகானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டது

கொரோனா  தொற்று  பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ்  கல்வி அமைச்சு நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக் கைகளை முன்னெடுத்து வருகின்றது .

மட்டக்களப்பு சுகாதார  வைத்திய அதிகாரி  பிரிவுக்குட்பட்ட  12 பாடசாலைகளில் இன்று முதல் எதிர்வரும் 24 ம் திகதிவரை இந்த தடுப்பு ஊசி ஏற்றப்படும் இதில் முதல் கட்டமாக 2003 ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதத்திற்கு முன்னதாக பிறந்த மாணவர்கள். கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளில் தோற்றிய மாணவர்கள் ,உயர்தர  பரீட்சைக்கு தோற்றவுள்ள   மாணவர்களுக்குமாக ஏற்ற முடியும். என மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய  அதிகாரி  வைத்தியர் கே .கிரிசுதன்   தெரிவித்தார்.


Leave a Reply