குருநாகல் வீதியில் ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள்!

அனுராதபுரம்- குருநாகல் பிரதான வீதி, ஸ்ரவஸ்திபுர சந்தியில் நச்சடுவா ஐக்கிய விவசாயிகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று வியாழக்கிழமை விவசாயச் செய்கைக்கு தேவையான உரத்தை பெற்றுத்தருமாறு கோரி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனுராதபுரம்- குருநாகல் வீதியில், விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது,

இதன்போது கருத்துரைத்த பராக்கிரம விவசாயிகள் அமைப்பின் தலைவர் லலித் சிறிசேன,

விவசாயச் செய்கைக்கு தேவையான உரம் கிடைக்கும்வரை நாம் வயல்களில் இறங்கி விவசாயம் செய்வதற்கு எம்மால் முடியாது.

நாளைய தினமே உரம் வழங்கப்படும் என்றால் வயல்களுக்குள் இறங்குகின்றோம். போதியளவு மழை பெய்கிறது. அதேபோன்று நாச்சாதுவ வாவியில் போதியளவு நீர் உள்ளது.

விவசாயத்துக்கு தேவையான நீர் காணப்பட்டாலும் விவசாயத்தை மேற்கொள்ள முடியாது.

ஏனெனில், உரம் இல்லை. இயற்கை உரத்தை பயன்படுத்துவதற்கு நாங்கள் விருப்பத்துடன் உள்ளோம். அதனை உடனடியாக செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply