எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள், எங்களுக்கு இரசாயன பசளையே வேண்டும்; சேதனப் பசளையால் விவசாய செய்கை அறுவடையை பெற முடியாது என தம்பலகாமம் – சம்மாந்துறை வெளி விவசாய சம்மேளன உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
தம்பலகாமம் பகுதியில் நேற்று புதன்கிழமை (20) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சேதன உரம் காரணமாக, கலை நாசினி புல் வகைகளை முளைக்கின்ற காரணத்தினால் விளைச்சல் குறைவாக உள்ளது.
மேலும், சேதனை பசளை தயாரிப்பு தொடர்பில் எவ்வித அறிவும் எமக்கில்லை. இதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
இந்த அரசாங்கம், ஆளுக்கொரு கதையை சொல்கிறார்கள். பிரதமர் ஒரு கதை, ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் என ஆளுக்கொரு கதையை கூறி வருகின்றனர்.
‘தம்பலகாமம் பிரதேசம் ஊடாக 2,000 ஆயிரம் ஏக்கர் நிலப்ப ரப்பில் நெற் செய்கை பண்ணப்பட்டு வருகிறது. ஆனால், இம்முறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
எங்களது வாழ்வாதாரமே வேளாண்மையில் தான் தங்கியுள்ளது. குடும்பங்களும் இதை நம்பியே வாழ்கிறது.
எது எப்படியோ, விவசாயிகளுக்கு இரசாயன உரத்தைப் பெற்றுத்தருமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்தனர்.
இதில் சம்மாந்துறை வெளி விவசாய சம்மேளனத்தின் உப தலைவர் க.திலகரட்ணம், செயலாளர் க. இராசலிங்கம், உப செயலாளர் க. விஜயரட்ணம், விவசாயி எம்.கிருஷ்ணப் பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






