கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த இரண்டரை வயது சிறுமியொருவர்இ சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம்- இரணவில கடற்கரையிலிருந்து காணாமல் போயிருந்த குறித்த இரண்டரை வயது சிறுமிஇ இன்று வியாழக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஇ
நீர்கொழும்பு – துங்கால்ப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமிஇ 18ஆம் திகதி மாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த சிறுமியின் பெற்றோர்இ துங்கால்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இதனையடுத்து சிறுமியைத் தேடும் நடவடிக்கையில் இரகசியப் பொலிஸாரும் ஈடுபட்ட நிலையில்இ சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை.
குறித்த சிறுமி காணாமல் போன போதுஇ வெள்ளை நிற டீசேர்டும் கட்டை காற்சட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில்இ சடலமாக மீட்கப்பட்ட சடலத்தின் உடலில் வெள்ளை நிற டீசேட் காணப்பட்ட போதும் அவரது உடலில் காற்சட்டையோ உள்ளாடையோ காணப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் உள்ளதுடன்இ உடலில் சில பகுதிகளும் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






