கோட்டா அரசை தாறுமாறாக கிழித்த முஜிபுர் ரஹுமான் எம்.பி

மக்கள் தான் தன்னை ஆட்சி பீடம் ஏற்றினர் என மார்பு தட்டிய ஜனாதிபதி கோட்டா இன்று நாட்டை நாசமக்கி விட்டார் என பாரளுமன்ற உறுப்பினர் முஜிருப் ரஹுமான் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.

அதிக வாக்குகளை கொடுத்து மக்கள் தான் ஆட்சி பீடம் ஏற்றினார்கள் என கோட்டா அரசு தெரிவிக்கின்றது.ஆனால் இன்று முழு நாட்டையும் அவர் நாசமாக்கி விட்டார்.பங்காளிகளுக்காவே சட்டத்தை இயற்றுவதும்,வர்த்தமானிகளை வெளியிடுவதுமாக அவர் நடந்துகொண்டுள்ளார்.

இதனால் தாம் தோல்வி அடைந்துள்ளதை அவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர்.20 க்கும் மேற்பட்ட சகாக்களை பல்வேறு வழக்குகளில் இருந்து காப்பற்றி உள்ளார்.

மேலும் விவசாயசத்தில் புரட்சி செய்வதாக ஆரம்பித்து மக்களையும் ,விவசாயிகளையும் வீதிக்கு வரவைத்து விட்டார்.இன்று மக்கள் உணவை உட்கொள்ள முடியாத அளவுக்கு விலைவாசி ஏறியுள்ளது.

எனினும் இந்த நிலையிலும் ரகசிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளல்,கடன்களை பெறுதல் என நாட்டை மீண்டும் மீண்டும் பாதாளத்தில் இந்த அரசு தள்ளிவிட்டது என தெரிவித்துள்ளார்.’

Leave a Reply