எரிபொருட்களின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

எல்.ஐ.ஓ.சீ அல்லது இந்தியன் லங்கா இந்தியன் ஒயில் கோர்பிரேசன் நிறுவனத்தினால் விற்பனை செய்யும் எரிபொருட்களின் விலைகள் இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை 5 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்று எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், எரிபொருட்களின் விலை உயர்த்தப்படாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்திருந்தார்.

Leave a Reply