லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டென் 92 வகை பெற்றோல் லீற்றரொன்றின் விலையை 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது என குறிப்பிடப்படுகின்றது.

அத்தோடு ஒட்டோ டீசல் லீற்றரொன்றின் விலையையும் 5 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஒக்டென் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லங்கா ஐஓசி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply