கிழக்கில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது

கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கங்களினதும் மரணங்களினதும் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் கொரோனா நிலவரம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2021 ஓகஸ்ட் 3ஆம் மற்றும் 4ஆம் வாரங்களில் சராசரியாக 6ஆயிரம் கொரோனா தொற்றாளார்களும் 100 மரணங்களும் கிழக்கு மாகாணத்தில் பதிவாகின.

“எனினும், செப்டம்பர் முதலாம் வாரத்தில் 4ஆயிரரத்து 400 தொற்றாளர்களும் இரண்டாம் வாரத்தில் 3ஆயிரத்து 300 தொற்றாளர்களும் 80 மரணங்களும், மூன்றாம் வாரத்தில் 2ஆயிரம் தொற்றாளர்களும் 67 மரணங்களும் நான்காம் வாரத்தில் 1,104 தொற்றாளர்களும் 42 மரணங்களும் ஐந்தாம் வாரத்தில் 801 தொற்றாளர்களும் 12 மரணங்களும் பதிவாகியுள்ளன.

“இவ்வறிக்கையின்படி, கிழக்கு மாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கும் மரணங்களும் படிப்படியாக குறைந்துகொண்டு செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறே முழு நாட்டிலும் படிப்படியாக குறைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது” என்று தெரிவித்தார்.

Leave a Reply