காத்தான்குடியில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தந்தை மகனுக்கு கொரோனா தொற்று

கடந்த 20 ஆம் திகதி வெல்லவாய – எல்லவெல ஆற்றில் நீராடியவேளை உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரில் இருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

காத்தான்குடி பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை (38), மகன் (15) மற்றும் மகள் (11) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் இந்த மூன்று பேரின் பிரேத பரிசோதனை வெல்லவாய மரண விசாரணை அதிகாரி எச்.எம்.ஜே.ஹேரத் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. மற்றும் மொனராகலை சட்ட மருத்துவ அதிகாரி எச்.ஆர்.எம்.யாபாவினால் தடயவியல் பரிசோதனை மொனராகலை பொது மருத்துவமனையில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதன்போதே தந்தை மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிஓவிடியின் ஏற்பாடுகளின் கீழ் இரண்டு மரணங்களையும் இறுதி செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி ஹெச்எம்ஜே ஹேரத் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply