நீர்வேலி தெற்கு கிராம பகுதியில், நேற்று இனம் தெரியாத கும்பலால் வீடொன்றில் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெறுள்ளது.
யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என கூறி , முப்படைகள் , பொலிசாரை வடமாகாண ஆளுநர் சந்தித்து கலந்துரையாடிய சில மணி நேரங்களில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அதன்படி, நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக்குழு ஒன்று தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
யாழ். நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்று வியாழக்கிழமை இரவு குறித்த தாக்குதல் இடம்பெறுள்ளது.
மோட்டார் சைக்கிளில் , வாளுகள் , கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது






