அமெ. நிறுவனத்துடன் மேலும் இரு ஒப்பந்தங்கள்! விமல் வீரவங்ச

அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இலங்கையின் LNG யின் மீது அமெரிக்க நிறுவனம் ஏகபோக உரிமை கொண்டிருப்பதற்கு எதிராக 11 அரசாங்கக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும், நிலைமையை விவாதிக்க ஜனாதிபதியிடம் அவகாசம் கேட்ட போதிலும், அவர் அத்தகைய வாய்ப்பை வழங்கவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்த அதிகமான தகவல்கள் பிரதமருக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியுமாக இருந்தாலும் ஜனாதிபதியுடனேயே இது தொடர்பாக விவாதிக்க வேண்டும்.

இப் பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் மேலும் இரண்டு ஒப்பந்தங்கள் அமெரிக்க நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply