இளைஞனின் உயிரை பறித்த அசுர வேகம்!

தவரன்குளம், அனுராதபுரம் வீதியின் வங்கி ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் இளைஞன் ஒருவன் உயிரிழந்தார்.

குருன்தன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின் கம்பம் ஒன்றில் மோதுண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply