ஏழு மூளை கொண்ட நிதியமைச்சர் எங்கே? தேடுகிறது எதிர்க்கட்சி!

ஏழு மூளை கொண்ட நிதியமைச்சர் நாட்டில் பொருட்களின் விலையேற்றத்துக்கு என்ன செய்தார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவோம் என்று கூறி சுபீட்சத்தின் நோக்கு என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள் .

இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு இந்த அரசு என்ன செய்தது.பொருட்களின் விலையேற்றம்,உரத் தடை,இதை தான் செய்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

சீமெந்து,பால்மா என எல்லாவற்றுக்கும் வரிசையில் நிற்கும் நிலையினால், நாட்டில் தற்போது வரிசை கலாச்சாரம் உருவாகியுள்ளது.

இதை செய்யவா மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கினார்கள் என கேள்வி எழுப்பினார்.

விவசாயத்தில் புரட்சி செய்கின்றேன் என ஆரம்பித்து விவசாயிகளை வீதிக்கு
கொண்டு வந்து விட்டீர்கள்.உங்களுடைய ஏழு மூளை கொண்ட நிதி அமைச்சர் இப்போது என்ன செய்கின்றார்.

உங்களுடைய பங்காளிகளுக்காக விலையை அதிகரித்து ,சட்டத்தை உருவாக்குகின்றீர்கள் என மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply