சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவர் கைது!

புத்தளம், தப்போவ குளத்தில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தப்போவ பகுதியைச் சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் நேற்று குறித்த பகுதியில் நடத்திய விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஒரு தொகை வலைகள் மற்றும் வள்ளம் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமையுடன், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply