மாகாண எல்லைகளில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர்!

நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதிகளில், வீதித்தடைகளில் முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எல்லைப் பகுதிகளில் திடீர் வாகன பரிசோதனைகளை அதிகரிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

இதற்காக கூடுதலான அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுமுறை தினங்கள் என்பதால் பலர் மாகாண எல்லைகளை கடக்கக்கூடும் என்ற காரணத்தினால், கடுமையான பரிசோதனையை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியும் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply