பூட்டை உடைத்து பாடசாலையை திறந்த ஆசிரியர் மீது முறைப்பாடு

200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் நேற்று (21) திறக்கப்பட்ட நிலையில், வெலிமடை ரத்கரவிட்ட மாளிகாதென்ன ஆரம்ப பாடசாலையின் அதிபர்இபாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை.

இதனையடுத்துஇ பாடசாலையின் பிரதான வாயிலில் போடப்பட்டிருந்த பூட்டை உடைத்துகொண்டு உள்நுழைந்துள்ளனர்.

அதன்பின்னர்இ மாணவர்களும் பாடசாலைக்கு வந்துள்ளதோடுஇ குறித்த பாடசாலைக்கு நேற்றையதினம் இரண்டு ஆசிரியைகளும் ஆசிரியர்கள் இருவரும் வருகைதந்தனர்.

மேலும், வெலிமடை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு தொலைபேசியின் ஊடாக அறிவுறுத்தியதன் பின்னர்இ அந்த ஆசிரியர்இ பூட்டை உடைத்துள்ளார்.

எனினும்இ பூட்டை பலவந்தமாக உடைக்கப்பட்டமைக்கு எதிராக அப்பாடசாலையின் அதிபர் டப்ளியு. எம். குணவர்தனஇ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதேவேளை, மதவழிபாடுகளின் பின்னர் கற்பித்தல் செயற்பாடுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply