மோட்டார் சைக்கிள் கொள்ளை: மூவர் கைது!

மட்டக்களப்பு, ஊறணி பகுதியில் மோட்டார் சைக்கிள் கொள்ளையுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று மோட்டார் சைக்கிள் ஒன்று கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில், பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில், குறித்த மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பெண் மற்றும் ஆண் ஆகியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply