நயினாதீவு விகாரையில், புதிதாக கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட பூஜை மண்டபத்தை கடற்படைத் தளபதி திறந்து வைத்துள்ளார்.
அத்துடன், நயினாதீவில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், அங்குள்ள மக்களுக்கு மதிய உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், நயினாதீவு விகாரையின் விகாராதிபதி, கடற்படையின் உயரதிகாரிகள் மற்றும் பௌத்த பிக்குகள் கலந்துகொண்டனர்








