மன்னார் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசிகளை பெறாத நபர்கள் மற்றும் கடந்த மாதம் முதல் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை(22) காலை தொடக்கம் மன்னார் எழுத்தூர் பாடசாலையில் இடம் பெற்று வருகின்றது
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பனிமனை மற்றும் மன்னார் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பனிமனை மன்னார் பிரதேச செயலகத்துடன் இணைந்து குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அதன் அடிப்படையில் மன்னார் நகர் பகுதியில் இதுவரை எந்த ஒரு கொரோனா தடுப்பூசியையும் பெற்று கொள்ளாதவர்கள் இன்றையதினம் சினோபாம் தடுப்பூசியின் முதல் டொஸ்சை பெற்று வருகின்றனர்.
அதே நேரம் கடந்த மாதம் சினோபாம் தடுப்பூசியில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டொஸ் தடுப்பூசியை பெற்று வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது
இது வரை மன்னார் மாவட்டத்தில் 83 வீதமானவர்கள் கொரோனா தடுப்பூசிகளில் இரண்டு டொஸ்களையும் 68 வீதமானவர்கள் முதல் டொஸ் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது






