கொரோனா தடுப்பு மருந்துக்காக அரசாங்கம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஸாந்த தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீPலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க செலவிடப்பட்ட தொகைக்கு சமமான பெரிய தொகையை கொரோனா தடுப்பு மருந்துக்காக செலவிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடிய உலகின் முதல் 10 நாடுகளில் இலங்கை ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நடவடிக்கையே காரணம்.
கொரோனா தொற்று இருந்தபோதிலும், அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் மிகப்பெரிய வளர்ச்சி இலக்குகள் அடையப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






