முதலிய கோயில் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

வட்டுக்கோட்டை, முதலிய கோயில் பகுதியில் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட மேலும் இரண்டு சந்தேகநபர்களை வட்டுக்கோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் முதலிய கோவில் பகுதியில் வன்முறைக் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த இருவர் படுகாயமடைந்ததுடன், சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யுமாறு, முதலிய கோவில், மூளாய், பொன்னாலை, துணைவி, தொல்புரம், புத்தூர் மற்றும் நுணாவில் பகுதி மக்கள் இன்று துணைவி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

அத்துடன, சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மூத்த பொலிஸ் அதிகாரி ஜனக கருணசிங்க மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி சமன் குணதிலக ஆகியோர் எதிர்வரும் மாதம் 16 ஆம் திகதிக்கு முன்னர் அவர்களை கைது செய்வதாக போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்தனர்.

அதனடிப்படையில், தீவிர செயற்பாட்டில் களமிறங்கிய வட்டுக்கோட்டை பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை இன்று கைது செய்துள்ளனர்.

Leave a Reply