யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் திடீரென நிலத்தில்வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காணி ஒன்றில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது குறித்த நபர் திடீரென வீழ்ந்து உயிரிழந்துள்ளார் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டாம் ஒழுங்கை ஆனைக்கோட்டை சேர்ந்த 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார் என தெரியவந்துள்ளது.
மேலும் இச் சடலம் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு அங்கு திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணையின் பின் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.






