யாழ். காரைநகர் கடற்பரப்பில் கடந்த 18ஆம் திகதி உயிரிழந்த இந்திய மீனவரின் உடல் இன்று காங்கேசன்துறை ஊடாகத் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது.
காநைகர் – கோவளம் பகுதிக்குள் 18ஆம் திகதி ஊடுருவிய இந்திய மீனவரின் படகு கடற் படையினரின் படகுடன் மோதியதில் இந்திய மீனவரின் படகு முழுமையாகக் கடலில் மூழ்கியது.
இதன்போது இரு இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டபோதும் ஒருவர் காணாமல்போயிருந்தார்.
இவ்வாறு காணாமல்போன இந்திய மீனவரைத் கடற்படையினர் 18ஆம் திகதி இரவு மற்றும். 19ஆம் திகதிகளில் தேடுதலில் ஈடுபட்டு 20 ஆம் திகதி நண்பகல் காணாமல்போன இந்திய மீனவர் இலங்கை கடற்படையினரால் உயிரற்ற உடலமாக மீட்கப்பட்டு காங்கேசன்துறை கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவ்வாறு காங்கேசன்துறைக்கு கொண்டுவரப்பட்ட உடலை காங்கேசன் துறைக்கு சென்ற தடயவியல் பொலிஸார் மற்றும் நீதிபதிசடலத்தை பார்வையிட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக உடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதன் பிரகாரம் 20ஆம் திகதி மாலை காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு இரவு பிரேத பரிசோதனையும் இடம்பெற்று நீரில் மூழ்கியதனால் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பித்து உடலம் தமிழகம் அனுப்புவதற்கான பணி இடம்பெற்றது.
இருந்தபோதும் உயிரிழந்த மீனவனுடன் பயணித்த ஏனைய இருமீனவர்களையும் விடுவிக்குமாறு விடப்பட்ட கோரிக்கையால் விடயம்கால தாமதம் கண்டது.
இந்தத்தாமதம் தமிழக மீனவர்களின் போராட்டங்கள் அதிகரிக்கக் காரணமானதால் இன்று உயிரிழந்த தமிழக மீனவரின் உடலம் மட்டும் காங்கேசன்துறை ஊடாக இலங்கை கடற்படையினர் காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு இந்திய கடற்படையிடம் உடலம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இவ்வாறு ஒப்படைக்கும் உடலம் இன்று பகல் 2 மணியளவில் உயிரிழந்தவரின் உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






