வவுனியாவில் நேற்றையதினம் பெய்த கடும்மழை , காற்றினால் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், பயன்தரும் மரங்களும் அழிவடைந்துள்ளது.
நேற்றையதினம் பெய்த கடும் மழை மற்றும் காற்று காரணமாக வவுனியா இராசேந்திரங்குளம், சூடுவெந்தபுலவு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் சில வீடுகளின் கூரைத்தகடுகள் காற்றினால் அடித்து செல்லப்பட்டுள்ளது.
அரபாத் நகர் பகுதியில் வீசிய கடும்காற்றினால் செய்கை பண்ணப்பட்டிருந்த வாழை மற்றும் பப்பாசி போன்ற பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தகவல்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது..






