ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் நாளை ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
உரப்பிரச்சினை, அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை, 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
ஆளுங்கட்சியின் அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
எனினும், ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர, கூட்டம் தொடர்பில் தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவரின் சடலம் தமிழகத்தில் ஒப்படைப்பு!https://samugammedia.com/indian-fishermans-body-handed-over-in-tamil-nadu/






