சீனாவிடமிருந்து நாட்டிற்கு சேதன பசளையை கொண்டுவரும் கப்பல் துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதை தடுக்குமாறு அனைத்து தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாக ஹார்பர் மாஸ்டர், கெப்டன் நிர்மால் டி சில்வா தெரிவித்தார்.
20 ஆயிரம் மெட்ரிக் தொன் சேதன பசளையுடன் குறித்த கப்பல் நேற்று மாலை நாட்டை வந்தடையும் என தேசிய தாவரங்கள் தொற்றுநீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் கொழும்பு துறைமுகத்திற்கு அறிவித்திருந்தது.
நாட்டிற்கு வரும் கப்பலில் காணப்படும் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் காணப்படுவதாகவும் தேசிய தாவரங்கள் தொற்று நீக்கி தனிமைப்படுத்தும் சேவை நிலையம் தெரிவித்திருந்தது.
எனினும், குறித்த கப்பல் கொழும்பு துறைமுக எல்லைக்குள் இதுவரை பிரவேசிக்கவில்லை எனவும் வருகை தருவது தொடர்பாக எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் ஹார்பர் மாஸ்டர் குறிப்பிட்டார்.
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை! முஜிபுர் ரஹ்மான்






