புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கை பெற்ற அந்நியச் செலாவணி வீழ்ச்சி!

2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து இந்த நாடு பெற்ற தொகை 1.6 பில்லியன் டொலராகக் குறைந்துள்ளது. இது 51.6 வீத சரிவாகும்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட 478.4 மில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஜூன் மாதத்தில் இலங்கைக்கு வெளிநாட்டுப் தொழிலாளர்கள் அனுப்பிய தொகை 274.3 மில்லியன் டொலராகும்.

வெளிநாட்டு தொழிலாளர் விசாரணைகளின்படி ஏப்ரல் மாதத்தில் 249 மில்லியன் டொலராக இருந்ததுடன் மே மாதத்தில் 304 மில்லியன் டொலராக உயர்ந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் சரிந்தது.

Leave a Reply