அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேனவை இன்னும் ஒரு மாதம் பதவியில் இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டொக்டர் குணசேன முன்பு எழுத்துபூர்வமாக ஓய்வு பெறுவதற்கான தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். ஜனாதிபதியும் அவர் பதவியில் இருந்து விலக ஒப்புக்கொண்டார்.
எனினும், பொருத்தமான ஒரு மாற்று இடம் கிடைக்கும் வரை இன்னும் ஒரு மாதம் காத்திருக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடந்த கொரோனாப் பணிக்குழு கூட்டத்தில் டாக்டர் குணசேன பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






