வெள்ளைப்பூண்டு மோசடி: தொழிலதிபரின் மகனுக்கு விளக்கமறியல்!

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பம்பலப்பிட்டி தொழிலதிபரின் மகன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வத்தளை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

25 வயதுடைய சந்தேகநபர் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான இந்த மோசடிக்கு தேவையான போலியான ஆவணங்களை தயாரித்து உதவியதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply