வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண ஆளுநர் இடையே சந்திப்பு!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, குழு மோதல்கள், தாக்குதல்கள் இப்பகுதிகளில் இருந்து முற்றாக அகற்றப்படும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாதுகாப்பான சூழல், பொருளாதார மேம்பாட்டுக்கான திட்டங்கள், கொரோனா தொற்று தொடர் நடவடிக்கை, பாடசாலைகளை மீள ஆரம்பித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்துணவு வழங்குகின்ற பொறிமுறை பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

Leave a Reply