இந்திய கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மீனவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம், ஆதி கோவிலடி தெருவைச் சேர்ந்த நிமலதாஸ் வீரசிங்கம், கஜிபன் தர்மராஜ் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இருவரையும் புழல் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரியவருகின்றது.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய கடற்படையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டு, நாகப்பட்டினம் கடற்படை முகாம் மூலமாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






