13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்செய்ய உதவுமாறு இந்தியாவிடம் கூட்டாக கோர தமிழ் கட்சிகள் ஏற்பாடு!

13 ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவதற்கு, ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இச் சட்டம் ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு, இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்காகவும் தமிழ்தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் கலந்துரையாடுவதற்கு முடிவு எட்டப்பட்டுள்ளது.

இன்று காலை நடைபெற்ற கட்சித்தலைவர்கள் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இது குறித்த முடிவை எடுத்துள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply