மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 4.00 மணியுடன் நீக்கப்படுகின்றது என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர டி சில்வா தெரிவித்தார்.
கொவிட் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியுடன் நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கூட்டத்தில் இது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என்றார்.
இதே நேரம், மாகாண மட்ட ரயில் சேவைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பிக்கும் என்றும் இவர் தெரிவித்தார். 
மேலும் சுகாதாரம், இராணுவம், பொலிஸ், சுற்றுலா ஆகிய தொழில் துறை சார்ந்தவர்கள் அடங்கலான கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் முன்னின்று தீவிரமாக ஈடுபட்டு வருகின்ற அனைத்து தரப்பினர்களுக்கும்  எதிர்வரும் 01 ஆம் திகதி முதல் பூஸ்டர் ஊசிகளை ஏற்கின்ற தீர்மானமும் கூட்டத்தில் எடுக்கப்பட்டது என்றார்.
இதே நேரம் எதிர்வரும் நவம்பர் 01 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இடம்பெறும் என்று போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்து உள்ளார்.
போக்குவரத்து தடை நீக்கப்படுகின்ற போதிலும் பொது சுகாதார நடைமுறைகள், கொரோனா தடுப்பு மற்றும் தவிர்ப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இறுக்கமாக பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரப்பட்டு உள்ளனர்.

Leave a Reply