சிங்கள சினிமாவின் பிரபல மற்றும் மூத்த நடிகையாக கருதப்படும் நடிகை விசாகா சிறிவர்தனா காலமானார்.
அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக, சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவர் தனது 64 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீ குலரத்னவின் ‘அனுராதா’ என்ற படத்தின் மூலம் திரைப்படத் துறையில் நுழைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






