யாழ்.நகரினை சுத்தமாக வைத்திருப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாண எஸ் எஸ் பி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பொலிசாரினால்இ இன்றைய தினம் யாழ் நகரை சுத்தமாக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது
யாழ். நகரில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதேஇ யாழ்ப்பாண பிராந்திய எஸ்எஸ்பி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்இ
யாழ்ப்பான நகரமானது ஒரு மிகவும் அழகான நகரம் அந்த நகரத்தினை தொடர்ந்து அழகுற வைப்பதற்காகவே இன்றைய தினம் பொலீசாரால் சுத்தம் செய்யும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
எங்களுடைய வேலைத் திட்டத்திற்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக பொதுமக்கள் தாம் பாவித்து விட்டு எறியும் கழிவுப் பொருட்களை அந்தந்த இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போட்டால் நகரம் சுத்தமாக பேணப்படும்.
எதிர்கால சந்ததியினருக்கும் இந்த பொலித்தீன் பாவனையினால் பாதிப்பு ஏற்படகூடிய நிலைமை காணப்படுகின்றது
பொதுமக்கள் தாம் பயன்படுத்தும் பொலித்தீன் கழிவுகளை பொலித்தீன் கழிவு கொட்டும் இடங்களில் போடுவதன் மூலம் யாழ் நகரினை நன்கு சுத்தமாக பயணம் முடியும் .
இதன் காரணமாகஇ பொலித்தீன் பாவனை தொடர்பில் பொதுமக்கள் சற்று விழிப்பாக செயற்படவேண்டும்.
இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத் திட்டமானது தொடர்ச்சியாக யாழ் மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்இ பொதுமக்கள் பொலிசாரின் செயற்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி எமது நகரத்தை சுத்தமாக வைத்திருக்க முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.






