திருமலையில் கடத்திச் செல்லப்பட்ட நபர்! ஐவரால் சித்திரவதை செய்யப்பட்ட கொடூரம்

திருகோணமலை நபரொருவரை, இனம் தெரியாத கும்பலொன்று கடத்திச் சென்று தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருகோணமலை – கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெறுள்ளது.

மேலும் தெரியவருவது,

திருகோணமலை முகமதியநகர் – மட்கோ பகுதியில் உள்ள வெதுப்பகத்தில் குறித்த நபர் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில், இனம் தெரியாத சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட நபர், இனம் தெரியாத கும்பலால் சித்திரைவதைக் குட்படுத்தும் போது, இதனை அவதானித்த மட்கோ போதை ஒழிப்பு குழுவினரால் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பபட்டது.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் இலிங்கநகரைச் சேர்ந்த ஐவரால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, நீதிமன்றுக்ககு ஆஜர்படுத்தவுள்ளனர்.

தற்போது, பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

எனினும், மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply