சிங்கள தீவாக மாறி வரும் நயினாதீவு? ஆதிர்ச்சித் தகவலை வெளியிட்ட பிரதேச சபை உறுப்பினர்

குறிகட்டுவான் வழியாக நயினாதீவு செல்லும் பாதையில், வழிகாட்டும் பலகையில் நாக விகாரை என்று மட்டுமே வழிகாட்டப்பட்டுள்ளது. நயினாதீவை சிங்கள தீவாக காட்டும் மனோநிலையா இது, இவற்றை எம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை என பிரதேச சபை உறுப்பினர் மதுசுதன் குமரதாசன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யாழில் இருந்து செல்லும் போக்குவரத்து பாதை குறிகட்டுவானை அடைந்ததும் இலங்கையின் பொறுப்பான திணைக்களம் ஒன்றால் நட்டப்பட வழிகாட்டும் பலகையில் நாக விகாரை என்று மட்டுமே வழிகாட்டப்பட்டுள்ளது.

அதையும் தாண்டி உள்ளே போனால் குறிகட்டுவான் துறையில் பௌத்த பதாதைகள் சிங்களத்தில் மட்டுமே காணப்படுகிறது.

படகில் எவ்வளவோ பயணிகள் நயினை நாக பூசணி ஆலயத்துக்குப் பயணிக்க ஏறி இருந்தாலும் ஓரிரண்டு சிங்களவர்களுக்காக படகு நாகவிகாரைக்கு சென்று தரித்த பின் தான் நாக பூசணிக்கான பயணிகளை அங்கு கொண்டு சேர்கிறது. பக்தர்கள் பலர் சினந்து கொள்கிறார்கள்.

இவ்விடயங்களில் என்ன கூறுகிறேன் என்றால் இது மத நல்லிணக்கத்தை குழப்பும் பதிவல்ல விழிப்புணர்வு பதிவு.

ஒரு வழிகாட்டும் பலகையில் இரண்டு ஆலயங்களையும் ஏன் பொறிக்கவில்லை, வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில் ஏன் தனியே பௌத்த அடையாளங்கள் மட்டும் காணப்படுகிறது.

நயினாதீவினை தனியே சிங்கள பௌத்த நாகவிகாரைகுரிய சிங்கள தீவாக காட்டும் மனோநிலையா இது இவற்றை எம் யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை.

மக்கள் வாக்கு போட்டது இவற்றையெல்லாம் கவனிக்கத் தான். இன அடையாளங்கள் மிக முக்கியமானவை. மக்கள் தங்கள் பிரச்சினைக்கெல்லம் தாங்களே போராடுவதென்றால் உங்களை வாக்கிட்டு அனுப்பியது எதற்கு.

இவ்விடயத்தை சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

விளைவை பார்ப்போம். ஏற்படுத்துவதென்றால் உண்மையான மத இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்துங்கள் என அவரது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply