திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு பயற்சிப்பட்டறை ஒன்று நேற்று இடம்பெறுள்ளது.
அதன்படி, உள ஆற்றுகைப்படுத்தலும், கற்கையில் நாட்டம் ஏற்படுத்தலுக்குமான பயிற்சிப் பட்டறை நேற்று சனிக்கிழமை (23) திருகோணமலையில் நடைபெற்றது.
ஆரம்பப் பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்பட உள்ள நிலையில், திருகோணமலை வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் நியமிக்கப்பட்ட 157 பட்டதாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
வலயக்கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறீதரன் தலைமையில் இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றுள்ளது.
மேலும், பாடசாலைகளுக்கு வருகை தருகின்ற மாணவர்களுக்கு தியானம், நற்சிந்தனை, சிறுவர் பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவைகள் மூலம் அவர்களை இயல்பு நிலையான கற்றலுக்கு கொண்டு வருவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேள, இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்காக பட்டதாரிப் பயிலுநர்களுக்கு பாடசாலைகள் ஒதுக்கப்பட்டு அவர்களது கடமை தொடர்பில் விளக்கங்களும் அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


திருமலையில் கடத்திச் செல்லப்பட்ட நபர்! ஐவரால் சித்திரவதை செய்யப்பட்ட கொடூரம்






